சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் புதிய Live Location பகிர்வு அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
Meta, X வரிசையில் பிரபலமான சமூக வலைதளமாக இருப்பது இன்ஸ்டாகிராம் (Instagram). தமது பயனர்களுக்காக பல அம்சங்களை கொண்டுவரும் இன்ஸ்டாகிராம், தற்போது Friend Map எனும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
இது கிட்டத்தட்ட Live Location Sharing அம்சம் என்று தெரிய வந்துள்ளது. Friend Map-யில் பல்வேறு Options கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமது Location-ஐ யார் பார்க்கலாம் மற்றும் யாருடன் பகிரலாம் உள்ளிட்டவை Options உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தில் உள்ள ‘Notes’, ‘Ghost Mode’ உள்ளிட்ட Options-ஐ பயன்படுத்தி, பயனரின் Last Active Location-ஐ Hide செய்து கொள்ளலாம்.
அத்துடன் ‘Close Friends’ Option மூலம் நெருங்கிய நண்பர்கள் List செய்து அதில் Location அனுப்பலாம். சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சத்தை, இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் பகிர முடியும் என மெட்டா (META) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மெட்டா இந்த வசதியை அறிமுகம் செய்தால் Snapchat-யில் உள்ள Snap Map வசதியை போன்று இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.