பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் எவ்வாறான திட்டத்தை கொண்டு பையின் எடையை குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.