Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏற்றாமல் செல்லும் பேருந்துகள்; வீதிகளில் அந்தரிக்கும் மாணவர்கள்!

ஏற்றாமல் செல்லும் பேருந்துகள்; வீதிகளில் அந்தரிக்கும் மாணவர்கள்!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றச்சுமத்தியுள்ளனர். மாறாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் உரிய அறிவுறுத்தல்கள் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தும் மாணவர்கள் இன்றும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு கொண்டு சென்று வடமாகாண போக்குவரத்து பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இதனைவிட இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை மாறாக பருவகால சிட்டை பெற்றபின்னர் ஏற்றாமல் செல்வது அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மாணவர்களை ஏற்றாது செல்லும் நிலை தொடரும் இந்த நிலையில் நேற்று முன்தினமும் (26) மாலை மாங்குளம் மகாவித்தியாலயத்தில் இருந்து வீடுசெல்ல முடியாது மாணவர்கள் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக தவித்து நின்றதாக அறிய முடிகிறது.

இவ்வாறான பின்னணியில் தொடர்ந்தும் பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் நிலையில் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

தொடரும் இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்
உலக செய்திகள்

299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்

May 29, 2025
கொழும்பில் கஜ முத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் கஜ முத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது

May 29, 2025
புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை
செய்திகள்

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

May 29, 2025
“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்
செய்திகள்

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்

May 29, 2025
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தாயும் மகனும் கைது
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தாயும் மகனும் கைது

May 29, 2025
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது
செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது

May 29, 2025
Next Post
‘பேஸ்புக்’ தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி!

'பேஸ்புக்' தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.