தமிழர் தாயகப் பிரதேசத்தின் கிளிநொச்சியில் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்க விட்டமைக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன், சனிக்கிழமை மாலை கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது ட்ரோன் கேமரா பறக்க விட்டுள்ளார்.
அதனையடுத்து இராணுவத்தினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்த போது தான் குறும்படம் ஒன்றை தயாரிப்பதற்காகவே ட்ரோன் கேமராவை பறக்க விட்டதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்று இளைஞன் தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவத்தினர் கிளிநொச்சி காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சந்தேக நபரை நாளை(4) ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.