பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் ருலபனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேக்கரி கடையொன்றை நடத்தி செல்லும் 20 வயதுடைய இளைஞராவார்.
பாதிக்கப்பட்ட இரு பெண்களும் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் குளிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும்போது குளியலறையில் கையடக்கத்தொலைபேசி ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் இது தொடர்பில் விடுதியின் பெண் உரிமையாளரிடம் விசாரித்துள்ள நிலையில் சந்தேக நபரான உரிமையாளரின் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.