இன்று 28.04.2023 மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்து.
மட்டக்களப்பு முகத்துவாரம் கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வாலைச்சேனை பேத்தாலை போன்ற இடங்களில் இருந்து வந்து மீன்களுக்கு வெடி வைப்பதனால் மட்டக்களப்பு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்களது பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கல்லடி பாலத்தை முடக்கி பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் எச்சரித்துடன் இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி தீர்வை மிக விரைவில் பெற்றுத்தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.