Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களிடம் பரீட்சையை அறிவித்துவிட்டு மறந்துபோன பல்கலைக்கழகம்!

மாணவர்களிடம் பரீட்சையை அறிவித்துவிட்டு மறந்துபோன பல்கலைக்கழகம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய மத்தியப் பிரதேசத்தில் தேர்வு அட்டவணையை வெளியிட்ட பல்கலைக்கழகம் தேர்வு நடத்த மறந்த சம்பவம் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் M.Sc.,(CS) பிரிவினருக்கு மார்ச் 5-ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தேர்வுக்காக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தயாராகியுள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் (மார்ச் 5) தேர்வு எழுதுவதற்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வந்தபோது, அந்த அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது, தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி இருந்த போதும், தேர்வு அறிவிக்கப்பட்டதையே பேராசிரியர்கள் மறந்துவிட்டதால், தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஷ்குமார் வெர்மா, விசாரணைக்கு உத்தரவிட்டதோடு தேர்வு நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறை ஒப்புக்கொண்டுள்ள பதிவாளர் தீபேஸ் மிஸ்ரா, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தால் மறக்கப்பட்ட தேர்வு இன்று மார்ச் 7 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என தீபேஸ் மிஸ்ரா அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பல்கலைக்கழக மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
Next Post
எலான் மஸ்கிற்கு போட்டியாக மாறியுள்ள சீனா!

எலான் மஸ்கிற்கு போட்டியாக மாறியுள்ள சீனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு