Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புனித மிக்கேல் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி-2024!

மட்டு புனித மிக்கேல் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி-2024!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தலைமையில் வெபர் மைதானத்தில் நேற்று (06) திகதி இடம் பெற்றது.

பாடசாலை மாணவர்களின் பாண்டு வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதிகளுக்கு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.

அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டியில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தினை மரியன் இல்லமும் இரண்டாம் இடத்தை மில்லர் இல்லமும் மூன்றாம் இடத்தை வேணல் இல்லமும் நான்காவது இடத்தை கிரவுதர் இல்லமும் பெற்றுக் கொண்டது.

இந் நிகழ்வின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் இயேசு சபை துறவிகளின் மேலாளர் அருட்தந்தை சகாயநாதன் அடிகளார், அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் விசேட அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி சி.சுபாகரன் மற்றும் 243 இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக உடற்கல்வி பிரதி பணிப்பாளர் வி.லவக்குமார், குட்செப்பட் பாடசாலையின் அதிபர் விரயன் சரவணமுத்து, பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்க பொது செயலாளர் கு.சகாந்தன், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
செங்கடலில் பயணித்த கப்பல் மீது தாக்குதல்; இலங்கையர்கள் மீட்பு!

செங்கடலில் பயணித்த கப்பல் மீது தாக்குதல்; இலங்கையர்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு