மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
நிலவின் மக்கள் வாழ்வது குறித்து, பல நாடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் நிலவில் மக்கள் குடியமர்ந்தால் அவர்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தவும், சோலார் பேனல்கள் போதுமானதாக இருக்காது என்று கூரிய ரஷ்யாவின் விண்வெளி ஏஜென்சியின் தலைவர் யூரி போரொசோவ் ( Yury Borisov) இதனை கருத்தில் கொண்டு ரஷ்யா நிலவில் அணு உலை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.