கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப்போட்டிகள் கடந்த 04.03.2024ம் திகதி திங்கட்கிழமை ஓட்டமாவடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இச்சுற்றுத்தொடரின் ஆரம்பப்போட்டிகள் கடந்த 26.02.2024ம் தொடங்கி இரு நாட்கள் லீக் போட்டிகளும் தொடர்ந்து 3வது நாள் கால் இறுதி ஆட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் கடந்த 04ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஐ.எம்.றிஸ்வி மற்றும் செயலாளர் ஏ.எல்.எம்.சதாம் ஆகியோரின் தலைமையில் உப தலைவர் எம்.ஐ.எம்.றமீஸ் மற்றும் கழக நிருவாகிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இவ்விறுதிப்போட்டிகளில் செம்மணோடை சாட்டோ அணியினரும், மீராவோடை இளம்பிறை அணியினரும் பங்குபற்றியதோடு இதில் அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.எம் ஏ. ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உருப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான், அஷ்ஷெய்ஹ் ஹாரூன்(ஸஹ்வி), அல்ஹாஜ் நியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் அரையிறுதிகளை வென்ற மீராவோடை இளம் பிறை மற்றும் செம்மண்ணோடை சாட்டோ ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்று மீராவோடை இளம்பிறை அணி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
குறித்த சுற்றுத்தொடரில் 32க்கும் மேற்பட்ட பிரதேசத்தின் முன்னணிக்கழகங்களின் கிரிக்கெட் அணிகள் பங்கு கொண்டிருந்தன.
வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்கின்னம் மற்றும் பணப்பரிசினை சட்டத்தரணி ஹபீப் றிபான் மற்றும் அகீல் அவசர உதவிச் சேவை பனிப்பாளர் நியாஸ் ஹாஜியார் தே டைம் ரெவல்ஸ் பணிப்பாளர் ஐ. எம் றிகாஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இச்சுற்றுத்தொடரை வெற்றிகரமாக கொண்டு நடாத்துவதில் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அணியின் செயலாளர் பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்