6 பெண்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று பிக்கு ஒருவர் அளித்த முறைப்பாட்டை அடுத்து 5 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.குருநாகல் மொன்னே குளம் – வீரததன பிரேதசத் தின் விகாரையை சேர்ந்த 48 வயதான பிக்கு ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இதன் அடிப்படையில் கைதான பெண்கள் நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, ஒரு
பெண் மே 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மற்ற நான்கு பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 32, 68, 44, 46 மற்றும் 38 வயதுடையவர்களாவர்.இந்த விகாரையை சேர்ந்த
ஒரே ஒரு பிக்குவுக்கு கிராம மக்கள் சிலருடன் சில காலமாக தகராறு இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
சுமார் இரண்டு வருடங்களாக இரு தரப்பிலும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு முறைப்பாடுகளாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் நன்கொடைசேகரித்தே இந்த விகாரையை கட்டினார்கள். கிராமத்தில் விகாரை இல்லாததால், இந்த விகாரை 2018இல் கிராம மக்களின் நன்கொடையில் கட்டப்பட்டது. இது ஒருகாலத்தில் தென் மாகாணத்
தில் உள்ள ஒரு விகாரையில் வாழ்ந்த ஒரு பிக்குவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது அவர் கல்பிட்டியில் உள்ள ஒரு விகாரையில் இருந்தார்.
இந்த பிக்கு நீண்ட கால மாக இந்த விகாரையில் தங்கவில்லை என்றும் அவரின் நெருங்கிய நண்பர் அல் லது சீடர் ஒருவர் இந்த விகாரையில் வசித்து வருகிறார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இந்த விகா ரையில் ஒன்பது பிக்குகள் அவ்வப்போது வசித்து வருகின்றனர்.
தற்போது கிராம மக்கள் இரு குழுக்களாக பிரிந்து விகாரைக்கு ஆதரவாக 10 முதல் 15 குடும்பங்கள் உள்ள
தாகவும், எஞ்சிய குடும்பங்கள் விகாரைக்கு எதிராக இருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். விகாரையில் சமய வழிபாடுகள் முறையாக நடைபெறவில்லை என கிராம மக்கள் சாடுகின்றனர்.
விகாரையின் பெயர் பலகை மற்றும் மின் மோட்டர் ஆகியவை திருடப்பட்டன என்று அண்மையில்
பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிராம மக்கள் ஒரு குழு விகாரையை ஆக்கிரமித்து. அங்குள்ள பிக்கு வெளியேறும் வரை விகாரையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினர். பொலிஸார் தலையிட்டுகிராம மக்களை விகாரையில் இருந்து அப்புறப்படுத்தினர். இப்பிரச்னை குறித்து மாவட்ட செயலாளரிடம்
தெரிவிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் திகதி, கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று விகாரைக்கு சென்று பிக்குவை
விகாரையை விட்டு வெளி யேறுமாறு வற்புறுத்தி துன்புறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தன்னை துன் .புறுத்திய ஆறு பெண்களின் பெயர்களை பிக்கு கூறியுள்ளார். மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட உள்ளார்