Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கை சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டங்களையே அரசு முன்னெடுக்கிறது; கருணாகரம் எம்.பி தெரிவிப்பு!

வடகிழக்கை சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டங்களையே அரசு முன்னெடுக்கிறது; கருணாகரம் எம்.பி தெரிவிப்பு!

2 years ago
in மட்டு செய்திகள்

வடகிழக்கு மாகாணங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவி வடகிழக்கினை சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் வகையிலான நிகழ்வு இன்று நடைபெற்றது. லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால் விவேகானந்தபுரம் பகுதியில் மாதிரிக்கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் அகிலன் பவுண்டேசன் ஊடாக இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதில்முக்கிய அதிதியாக இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகருமான மு.கோபாலகிருஸ்ணன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சசிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது வாழ்வாதார உதவிகள்,பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,வறியவர்களுக்கான அரிசிப்பொதிகள்,விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள்,சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டதுடன் கிராம மக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்திசெய்யும் வகையில் இரண்டு பொதுக்கிணறுகள் திறந்துவைக்கப்பட்டதுடன் பயன்தரு மரங்களை நடுகை திட்டத்தினையும் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் விவேகானந்தபுரம் பொதுநூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களும் வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொள்ளப்பட்டது.

விவேகானந்தபுரம் கிராமமான போரதீவுப்பற்று பிரதேசத்தில் பின்தங்கிய பகுதியென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால் குறித்த கிராமம் தெரிவுசெய்யப்பட்டு மாதிரிக்கிராமம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் மாறிமாறி இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்களினால் பல வழிகளில் அடிமைகளாக்கப்பட்டிருந்தார்கள். கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணமாகயிருந்ததை இன்று பேரினவாதிகள் குடியேற்றங்கள் மூலமாகவும் பௌத்த மயமாக்கல் மூலமாகவும் கிழக்கு மாகாணத்தை சிங்கள பௌத்தமயமாக்கி வருகின்றனர், மாற்றமுற்படுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான தொல்பொருள் செயலணியை உருவாக்கியிருந்தார்கள்.11பேர் கொண்ட அந்த குழுவில் பௌத்தமதகுருமார்களும், ஓய்வுபெற்ற பாதுகாப்பு தரப்பினை சேர்ந்தவர்களும் உள்ளடக்கப்பட்டு தொல்பொருள் என்ற ரீதியில் பல இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டன.

இதுபோன்று பல இடங்களில் தொல்பொருள் என்ற பெயரில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடமாகாணத்தில் வெடுக்குநாறி மலை,குருந்தூர்மலை போன்ற இடங்களில் பௌத்ததினை திணிப்பதற்காக விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். அதுமட்டுமன்றி திருகோணமலையில் பாடல்பெற்ற தலமான கோணேஸ்வரத்தையும் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சிப்பதுடன் கன்னியா வெந்நீரூற்றில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

லண்டனில் இருபதுக்கு மேற்பட்ட சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவராக இங்குவந்துள்ள இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவர் மு.கோபாலகிருஸ்ணன் அவர்கள் இருந்துகொண்டு அனைத்து சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து பௌத்தமயமாக்கலுக்கு எதிராக கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றவேண்டுமாகயிருந்தால்,இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிசெய்ய வேண்டுமானால் தொல்பொருள் திணைக்களம் ஊடாக சைவ ஆலயங்களை அழித்து பௌத்த ஆலயங்கள் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று குரல்கொடுத்ததுமட்டுமன்றி எமது உரிமைகளுக்காக நாங்கள் நடாத்தும்போராட்டங்களுக்கு அவரது தலைமையில் கைகொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்
செய்திகள்

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

May 15, 2025
ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
செய்திகள்

ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

May 15, 2025
மட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் மீது இனம் தெரியாதோர் வழி மறித்து தாக்குதல்
காணொளிகள்

மட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் மீது இனம் தெரியாதோர் வழி மறித்து தாக்குதல்

May 14, 2025
பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்
செய்திகள்

பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்

May 14, 2025
மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்
செய்திகள்

மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்

May 14, 2025
Next Post
இலங்கையில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.