மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது 2024.03.07 ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் மட்டிக்கழி கதிரொளி விளையாட்டு மைதானத்தில், வித்தியாலய அதிபர் திரு V.முருகதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி.S.ரவிராஜா அவர்களும், விசேட அதிதிகளாக உடற்கல்வி பாடத்திற்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு V.லவக்குமார், மற்றும் முறைசாரா கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளரும் பாடசாலையின் PSI இணைப்பாளருமாகிய திரு.M.தயானந்தன் அவர்களும், கௌரவ அதிதிகளாக பழைய மாணவர் திரு K.திலகன் அவர்களும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு P.சடாட்சரராஜா அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் கங்கை இல்லம் யமுனை இல்லம் காவேரி இல்லம் என மூன்று இல்லங்களில் இருந்து மாணவர்கள் தங்களுடைய விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அந்த வகையிலே முதலாம் இடத்தை காவேரி இல்லமும், இரண்டாம் இடத்தை கங்கை இல்லமும், மூன்றாம் இடத்தை யமுனை இல்லமும் பெற்றுக் கொண்டார்கள். மேலும் இல்லச் சோடனைக்கான போட்டியிலே இயற்கையான முறையில் பசுமையாக மயில் போன்ற அழகிய தோற்றத்தில் அமைக்கப்பட்ட காவேரி இல்லம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றி கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு பிரதம அதிதி மற்றும் விசேட அகதிகளின் உரைகளும் இடம்பெற்றன. இறுதியாக உடற்கல்வி ஆசிரியை திருமதி.மேனகா மேர்வின் அவர்களின் நன்றியுரையுடன் இல்ல விளையாட்டுப் போட்டியானது இனிதே நிறைவு பெற்றது.