Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடமராட்சி துன்னாலை பகுதியில் இளைஞனின் காலை வெட்டிய நபர்கள்; 16 வயது மாணவிக்கு பிணை!

வடமராட்சி துன்னாலை பகுதியில் இளைஞனின் காலை வெட்டிய நபர்கள்; 16 வயது மாணவிக்கு பிணை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடமராட்சி, துன்னாலை பகுதியில் பழிக்குப் பழி வாங்கும் மோதலில் இளைஞன் ஒருவரின் காலை வெட்டி துண்டாடிய பயங்கர சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகிய 16 வயது மாணவி பருத்தித்துறை நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தலைமறைவாகியுள்ள அவரது 3 சகோதரர்களுக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி, துன்னாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வாகனத்தினால் மோதி தள்ளி, வாளால் வெட்டி காயப்படுத்திய பயங்கர சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இரவு நிகழந்துள்ளது.

இரு தரப்புக்கிடையில் சில காலமாக நடந்து வரும் வாள்வெட்டு மோதலின் தொடர்ச்சியாக பழிவாங்குவதற்காக இநத வாள்வெட்டு சம்பவம் நடந்துள்ளது.

துன்னாலை, வேம்படி சந்திக்கு அண்மையாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை, மகேந்திரா வாகனத்தில் வந்தவர்கள் பின்பக்கமாக மோதித்தள்ளி, நிலத்தில் விழுந்த ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். வாள், கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெட்டுக்காயங்களுக்குள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசலைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதலை நடத்தியவர்கள் வந்த மகேந்திரா வாகனத்தை சற்று தள்ளி பற்றைக்காட்டுக்குள் மறைத்து விட்டு தப்பியோடினர்.

துன்னாலை, குடவத்தை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறி, நீண்டகாலமாக பரஸ்பரம் வாள்வெட்டு தாக்குதல்கள் நடந்து வருகிறது.

தற்போது, வாள்வெட்டுக்கு இலக்கானவருக்கு கடந்த வருடம் எதிர்தரப்பினர் வாளால் வெட்டி காயப்படுத்தியிருந்தனர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பிணையில் விடுதலையான பின்னர், கடந்த நவம்பர் மாதம் பதிலடியாக மற்றொரு வாள்வெட்டு சம்பவம் நடந்தது.

அப்போது வாள்வெட்டுக்கு இலக்கானவர் (தற்போது வெட்டுக்கு இலக்கானவர்) நண்பர்கள் சிலருடன் சென்று, ஆலயமொன்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை சரமாரியாக வெட்டித்தள்ளினர். இந்த தாக்குதலில் காயமடைந்தவரே முதலில் தாக்குதல் நடத்தியவர்.

அவர் மந்தியை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவரது உடலில் 32 வெட்டுக்காயங்கள் இருந்தன. அவர் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சில மணி நேரங்களில் அவரது கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் பெருந்தொகையானவர்கள் அவசர சிகிச்சை பிரிவின் முன்பாக குழுமி விட்டனர். அங்கு நோயாளியுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் மாத்திரமே நிற்கலாமென மந்திகை வைத்தியசாலை பாதுகாவலர்கள் ஏனையவர்களுடன் கறாராக நின்றாலும், அன்று கப்சிப் என இருந்து விட்டனர்.

அங்கு குழுமிய யுவதிகளே “வெட்டினவனை விடக்கூடாது“ என இளைஞர்களை பகிரங்கமாக உசுப்பேற்றிக் கொண்டிருந்ததை செய்தியாளர்கள் அவதானித்திருந்தனர்.

இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொர்புடைய பிரதான நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவரின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்டு, பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்ட குடும்பம் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறி சென்றது.

இந்த குடும்பத்தை சேர்ந்த- பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர்- பிணையில் விடுதலையான பின்னர், கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி இரவு மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மகேந்திரா வாகனத்தில் வந்த குழுவொன்று அவர்களை மோதித்தள்ளி வாளால் வெட்டியுள்ளது.

32 வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவரின் குடும்பமே வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரின் மீதும் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்திருந்தார். வாள்வெட்டு சம்பவம் சிசிரிவி காட்சியில் பதிவாகியிருந்தது. அதில் அந்த குடும்பத்தை சேர்ந்த 3 மகன்கள் அடையாளம் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவரது கால் ஒன்று அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட குடும்ப தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று, அவரது மனைவியும், 16 வயதான மகளும் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டு, தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட 3 மகன்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் தொலைபேசி பகுப்பாய்விற்குட்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் கைது!

இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.