Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி  தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்

கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தை நேரில் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்லூரியில் நாடகத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு, முதலாம் ஆண்டு கற்கைநெறியைத் தொடர்ந்து வந்ததுடன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 12 மணியளவில் விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் உயிரிழந்த மாணவியையும் மயங்கி விழுந்த இரு மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும், மயங்கி விழுந்த இரு மாணவிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைச் சம்பவங்கள்

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான ஏழு மாத காலப்பகுதியில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 164 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு

கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு