Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களின் ரமழான் விடுமுறையில் குரோதம் காட்டும் நபர்கள்; இம்ரான் மகரூப் எம்.பி கவலை!

முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களின் ரமழான் விடுமுறையில் குரோதம் காட்டும் நபர்கள்; இம்ரான் மகரூப் எம்.பி கவலை!

3 years ago
in செய்திகள்

அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என 04/2024 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை அமைச்சுச் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள். திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன, நியதிச்சட்ட சபைத் தலைவர்களை விழித்து வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் இந்த விசேட விடுமுறையை பெற விரும்புபவர்கள் அதற்காக விண்ணப்பித்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சுற்றறிக்கைக்கு முரணான செயற்பாடாகும். அரசு முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு இந்த ரமழான் காலத்தில் கொடுத்துள்ள சலுகைகளை தடை செய்கின்ற ஒரு செயற்பாடாகும்.

சில அதிகாரிகளின் குரோத எண்ணம் இதன் மூலம் தெளிவாகப் புலப்படுகின்றது. முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் தொழுகையிலும், மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒருவர் முஸ்லிம் உத்தியோகத்தர் என தெரிந்தால் அவருக்கான இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அலுவலகப் பிரதானியின் கடமையாகும்.

கிழக்கு மாகாண சபையில் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
Next Post
உடனடியாக நியமிக்கப்படவுள்ள 2500 ஆங்கில ஆசிரியர்கள்; ஓய்வு பெற்றவர்களுக்கும் நியமனம்!

உடனடியாக நியமிக்கப்படவுள்ள 2500 ஆங்கில ஆசிரியர்கள்; ஓய்வு பெற்றவர்களுக்கும் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு