அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பிற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் நேற்று (14) முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்காக மாதாந்தம் சுமார் 12 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதுவரையில் இந்த கடமையை முன்னெடுத்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிலிருந்து விலகியுள்ளனர்.
அதேசமயம் ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் என்பது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனமானது, நில செயல்பாடுகள், கடல்சார் செயல்பாடுகள், வணிக மற்றும் தொழில்துறை பயிற்சி கல்லூரி, கேட்டரிங், சிறப்புத் திறன் சேவை பிரிவு மற்றும் சைபர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சேவை போன்ற ஆறு வருவாய் ஈட்டும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.