Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை மத்ரஸா மாணவன் உயிரிழப்பு விவகாரம்; மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்!

கல்முனை மத்ரஸா மாணவன் உயிரிழப்பு விவகாரம்; மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்முனை மத்ரஸா பாடசாலையில் கல்வி கற்று வந்த காத்தான்குடி மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் நேற்று முன்தினம் (20) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான் 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை( 20) மன்றில் ஆஜராகி இருந்தனர்.பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணை ,மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
மிகப்பெரிய நதி டால்பினின் மண்டையோடு அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிப்பு!

மிகப்பெரிய நதி டால்பினின் மண்டையோடு அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு