தமிழ், சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/03/image-700.png)
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களம் மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.
இக்காலத்தில் சிறப்புத் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.