உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் எங்கு நடந்தது என்பதையும் நாம் அறிவோம். அந்த வழக்குகள் அனைத்தையும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கிறது.

ஈஸ்டர் தாக்குதலை உண்மையில் யார் செய்தார்கள் என்று இதுவரை யாரும் கூறவில்லை, ஆனால் அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.