Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேஷன் டிசைனிங் படிக்க சென்ற மாணவியிடம் ஒரு வாய் சோறு ஊட்டுமாறுகேட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற முதியவர்!

பேஷன் டிசைனிங் படிக்க சென்ற மாணவியிடம் ஒரு வாய் சோறு ஊட்டுமாறுகேட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற முதியவர்!

2 years ago
in செய்திகள்

பேஷன் டிசைனிங் தொடர்பில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவி (வயது 23) தனக்குத் தேவையான பயிற்சியை பொற்றுக்கொள்வதற்காக, பத்திக் கைத்தொழிற்சாலைக்கு சென்றிருந்த போது அங்கிருந்த 80 வயதானவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒருபிடி சோற்றை, ஊட்டி விட்டுள்ளார். அப்போது, அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த அந்த முதியவர் முயன்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முதியவரின் பிடிக்குள் சிக்கிக்கொள்ளாத அப்பெண், அங்கிருந்து தப்பியோடிவந்து, தன்னுடைய காதலனுடன் வந்து முறைப்பாடு செய்துள்ளார் என்று பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, அந்த பத்திக் கைத்தொழிற்சாலைக்கு அந்த யுவதி, பல தடவைகள் சென்றுள்ளார் எனவும், எனினும் தகவல்களை பெற்றுக்கொள்ளாது திரும்பியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

யுவதியான மாணவி, சம்பவ தினம் அவ்விடத்துக்குச் சென்றபோது பகல் உணவுப்பொதியையும் எடுத்துச்சென்று, தொழிற்சாலைக்கு பின்புறமாக வைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவ்விடத்துக்கு வருகைதந்த தொழிற்சாலையின் உரிமையாளரான 80 வயதான நபர், “மகளே எனக்கு ஒருவாய் சாப்பாடு ஊட்டிவிடு” எனக் கேட்டுள்ளார். தூர பிரதேசத்தில் இருந்து வந்திருந்து அந்த பெண், எவ்விதமான தயக்கமும் இன்றி, ஒருபிடி சோற்றை ஊட்டிவிட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, “அனே மகளே, சரியான சுவையோ, சுவை, இன்னுமொரு வாய் ஊட்டிவிடவும்” எனக்கேட்டுள்ளார். அவ்வாறு கேட்டுக்கொண்டே அப்பெண்ணுக்கு அருகில் வந்த தாத்தா, அப்பெண்ணின் உடலை தொட்டு ஆங்காங்கே வருட தொடங்கியுள்ளார். சற்றும் எதிர்பாராத அந்தப்பெண், சாப்பாட்டுப் பொதியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, கைப்பையையும் எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து கிளம்பி, தங்குமிடத்துக்குச் சென்றுள்ளார்.

தனக்கு நேர்ந்ததை தன்னுடைய காதலனிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், காதலனுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்

August 27, 2026
மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி
செய்திகள்

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

August 27, 2026
ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்
செய்திகள்

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

August 27, 2026
பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!
செய்திகள்

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

August 27, 2026
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!
செய்திகள்

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

August 27, 2026
நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!
செய்திகள்

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

August 27, 2026
Next Post
கையடக்கத் தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு