Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது!

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டம் ஒன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நியுசிலாந்தின் வெளிநாட்டு அமைச்சின் நிதியுதவியின் கீழ் சிறுவர் நிதியத்தின் ஊடாக யுனிட்டி லங்கா அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் சிறுவர் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செல்;வி ஆடித் ஹோஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டதுடன் சிறுப்பு அதிதிகளாக சிறுவர் நிதியத்தின் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் டினன்த தம்பாவிற்ற,கிரான் பிரதேச செயலாளர் க.சித்திரவேல்,புனானை 23வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் நிலாந்த பிரேமரத்ன,முல்லைதீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றமடைந்துவரும் காலநிலையிலிருந்து மிகவும் வறிய நிலையில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக குளங்கள் அபிவிருத்திசெய்யப்படுவதுடன் சிறுவர்களுக்கான சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்தல்,சுகாதாரத்தினை உறுதிப்படுத்தல்,பாடசாலை மாணவர்களின் தேவைகளை உறுதிப்படுத்தல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகப்பிரிவுகளான கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகள் இதன் கீழ் தெரிவுசெய்யப்பட்டு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை
செய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

October 5, 2026
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
Next Post
ஏறாவூர் பிரதேசத்தில் 225 குடும்பங்களுக்கு புனித நோன்பினையொட்டி பேரீச்சம் பழப்பொதிகள் வழங்கும் நிகழ்வு!

ஏறாவூர் பிரதேசத்தில் 225 குடும்பங்களுக்கு புனித நோன்பினையொட்டி பேரீச்சம் பழப்பொதிகள் வழங்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு