யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் போல் பாசாங்கு செய்து ஓட்டோச் சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளனஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஓட்டோச் சாரதிகளால் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத் தில் வெவ்வேறாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த ஓட்டோச் சாரதிகள் இருவரும் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.நேற்று முன் தினம் பகல் பருத்தித்துறையில் இருந்து ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளைப் பார்க்கவெனக் கூறி வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கீரிமலையில் ஓட்டோச் சாரதிக்கு குளிர்பானத்துக்குள் மயக்க மருந்து கலந்துகொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற் றும் நகைகளைத் திருடிச் சென் றுள்ளனர்.அதே கும்பல் மற்றொரு ஓட்டோவை கீரிமலையில் இருந்து வாடகைக்கு அமர்த்தி பருத்தித் துறைக்குச் செல்லும் வழியில் குறித்த சாரதிக்கும்குளிர்பானத்துக்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித் துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.ஒரே நாளில் ஒரே கும்பல் இரு வேறு நூதனத் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டமை பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டோச் சாரதிகள் குறித்த விடயம் தொடர்பில் அவதானத் துடன் செயற்படுவது திருட்டுக்களை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது.