ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.