ஜனாதிபதி இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் வடக்கு மாகாணத்தையும் ,கிழக்கு மாகாணத்தையும் பிரித்து கையாள முயற்சிக்கின்றார். அதற்கு ஒரு சில தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்குவது கண்டிக்ககூடிய செயற்பாடு என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரதி தலைவருமான இரா.துரைரெட்ணம் குற்றம் சுமத்தி உள்ளார். நேற்று காலை மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் கீழ் உள்ள பெளத்த சாசன அமைச்சை கொண்டு தமிழர் இருப்புக்களை கைப்பற்ற முயற்சிக்கும் தரப்பினர்களின் செயற்பாடுகளை உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு அதனை நிறுத்த வேண்டும்.
அவர் மேலும் இது தொடர்பில் தெரிவித்ததாவது;