ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற தினத்தில் இருந்து 2024 பெப்ரவரி மாதம் வரை இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கடன் மற்றும் அதன் வட்டியை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) திரு.ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் 2022 ஜூலை 21 முதல் 2024 பெப்ரவரி வரை 1338.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பலதரப்புக் கடன்கள் மற்றும் வட்டியாக செலுத்தியுள்ளதாக தென்னகோன் தெரிவித்துள்ளார் .
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அமைய , ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 760.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு 7.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,
ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கு 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கு 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் ஈ.எப்.எப் 23-26 திட்டத்திற்கு 9.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ,
நோர்டிக் அபிவிருத்தி நிதியத்திற்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திற்கு 29.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கிக்கு 489.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுமாக ,
மொத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலப்பகுதியில் 1,909.7 அமெரிக்க டொலர்கள் கடனாகவும் வட்டியாகவும் வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .