ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கை அரசியல் வாதிகள் படையெடுக்கும் நிலையில் எமது இருப்பினை பலப்படுத்த வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் எம்பியுமான சரவணபவன் தெரிவித்தார். நேற்று மதியம் யாழ் நகரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பாக சிந்திக்கப்பட்டது. இருந்தும் அது தொடர்பாக பெரிதாக கடந்த தேர்தல்களில் பேசப்படாவிட்டாலும் இம்முறை பொது வேட்பாளர் குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. பொது வேட்பாளர் இல்லாத பட்சத்தில் பல மக்கள் இம்முறை வாக்களிக்காமல் இருப்பதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
பெரும்பான்மை இனத்தில் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க, தற்பொழுது ராஜபக்சகளும் தயாராக இருக்கின்றார்கள் . எனவே இவ்வாறாக வாக்குகள் பெரும்பான்மை இனத்தில் பிரிந்து போகின்ற பட்சத்தில் நிச்சயமாக முடிவெடுக்க வேண்டிய வாக்காளர்களாக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றார்கள். எனவே தமிழர்களை எவ்வாறு அரவணைத்து செல்லலாம், தமிழர்கள் மீது எவ்வாறு பூச்சூடி ஆசனத்தை பெறலாம் என அவர்கள் இனி சிந்திக்க தொடங்குவார்கள்.
அனுரகுமார திசாநாயக்க யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்தார் .எந்தவிதமான தமிழர்கள் சார்ந்த உரிமைக்கான உத்தரவாதத்தினையும் அவர் வழங்கவில்லை. இதில் மிகக் கேலியான விடயம் என்னவெனில் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து விட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமாம் இது எவ்வாறு இருக்கின்றது என்றால் நாடு அபிவிருத்தி அடைந்து விட்டால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவதைப் போன்று காணப்படுகின்றது.
அனுரகுமார திசாநாயக்க வடக்கு கிழக்கை பிரித்தவர், இரண்டாவது தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து எமது நிலைப்பாட்டை குழப்பியவர் இதனை ஒருவரும் மறந்துவிடக்கூடாது . இதனை எல்லாம் அவர் கடந்து வருகின்றார் இங்கே அதில் ஒரு உண்மை உள்ளது. தமிழ் மக்கள் நடந்ததை மிக விரைவில் மறந்து விடுவார்கள்.
இந்த முறை மறந்து விட மாட்டார்கள். நான் மாத்திரம் அல்ல எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் தங்களுடைய வாக்குகள் சிதறடிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு நாம் வாக்களிக்க கூடாது.
இது தொடர்பில் இளைஞர்களுக்கு உரிய அரசியல் தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ச சிங்கள வாக்குகளால் மாத்திரமே தான் வெற்றி பெற்றதாக மார்தட்டி பேசினார் . அவருடைய நடவடிக்கைகள் அவரை பதவியால் துரத்த செய்தது சஜித் பிரேமதாசவினை எடுத்து நோக்குங்கள் முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
அதனைக் கண்டும் காணாமல் இருக்கின்ற சஜித் பிரேமதாச இன்று தென்னிலங்கை வாக்குகளை பெறுவதற்காக ஈஸ்டர் தாக்குதலை பற்றி கூடுதலாக பேசுகின்றார். அது எவ்வாறு இரட்டை வேடம் போட முடியும் அங்கே தென்னிலங்கையிலே ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்ற சஜித் பிரேமதாச முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணையை கூற முடியாதது ஏன்? காணாமல் போனோர் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? அவர்களுக்கான நீதித் தொடர்பில் கதை பேசாது இருப்பது ஏன்? 2019 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தோம்.
அன்றிலிருந்து கூட தனக்கு இவ்வளவு மக்கள் ஆதரவளித்தார்களே என்று இந்த மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அண்மையில் வெடுக்குநாறிமலை விடயம் தொடர்பில் பாராளுமன்றில் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். எது எவ்வாறாயினும் தேர்தலில் இவர்கள் தமிழ் மக்கள் சார்பில் கேள்விகளை கேட்டால் சிங்கள பெரும்பான்மை இவர்களை உதறித் தள்ளிவிடும். பதவிக்கு வந்தால் கூட தமிழர்கள் மீதான உரிமைகளை வழங்குவதில் இவர்கள் காலத்தை தாழ்த்துகிறார்கள் இதற்கு உதாரணம் கடந்த 70 கால வருடங்கள்.
இந்த பொது வேட்பாளர் தொடர்பில் பல பேர் பல வியாக்கியானங்களை கூறலாம் சேர்ந்து நில்லுங்கள், சேர்ந்த பெற்றுக் கொள்ளுங்கள் என பலர் கூறலாம். நாங்கள் சேர்ந்து அரசாங்கத்துடன் பயணிக்க வில்லையா நல்லாட்சி காலத்தில் எவ்வளவு விடயங்களை நாங்கள் மேற்கொண்டும் ஏமாற்றப்பட்டோம்.
இந்தியாவாக இருக்கலாம் வெளிநாட்டு தூதர்களாக இருக்கலாம் இது தொடர்பில் கதைப்பதற்கு வருவார்கள் முதலில் அவர்கள் கதைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. காரணம் சந்திரிகாவின் காலம் முதல் தமக்குத் தேவை ஏற்படுகின்ற பொழுதெல்லாம் இந்த நல்லிணக்க பேச்சுக்கள் ஆரம்பமாகும்.
ஒவ்வொரு முறையும் இந்த சர்வதேசம் வெளிநாடுகள் சிங்களப் பெரும்பான்மை அரசிற்கே தமது ஆதரவினை வழங்கி வருகின்றது.
பாருங்கள் ஜெனிவா விடயம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு கொண்டே செல்கின்றது ஒரு முடிவு கிடைக்கப்பெற்றதாக இல்லை இப்பொழுது தேர்தல் காலம் வருகின்றது அங்கே ரணில் வருகின்றார் ரவிகருணாநாயக்க வருகிறார் சஜித் பிரேமதாசர வருகின்றார் திசாநாயக்கமும் வருகின்றார் அனைவரும் தங்களுடைய தேவைகளை ஒட்டி யாழ் மக்களிடம் வாக்கு பிச்சை எடுப்பதற்கு வருகின்றார்கள் அவர்களுக்கு முதுகெலும்பிருந்தால் முதலில் எங்களுடைய பிரச்சனைகளை விளங்கிக் கொண்ட அதற்குரிய தீர்வுகளை வழங்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் தென்னிலங்கை சேர்ந்தோருக்கு வாக்களித்து மாபெரும் தவறினை நாம் இழைத்திருந்தோம். எந்தக் கட்சி கேட்டாலும் தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுங்கள் அது எந்த கட்சியாகவும் இருக்கட்டும் தற்பொழுது இந்த பொது வேட்பாளருக்கு பல பெயர்கள் அடிபடுகின்றது. அது எந்த வேட்பாளராகவும் இருக்கட்டும் மக்களால் ஏற்றுக் கொள்ளக் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக சிறிதளவேனும் அரசியல் ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும். நிச்சயமாக தமிழ் மக்களால் ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும் அதனை தொடர்ந்து நாம் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கலாம்
அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இந்த பொதுவேட்பாளர் குறித்து பேச தொடங்கியுள்ளன தமிழரசு கட்சி தொடர்பில் இன்னமும் பேசவில்லை தமிழரசு கட்சி என்ன சொல்கின்றதோ எனக்கு தெரியாது என்னுடைய நிலைப்பாடு பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் . இது குறித்து நான் மூன்று நான்கு மாதங்களுக்கு முதலில் சிலருடன் இது தொடர்பில் பேசி இருந்தேன். தமிழரசு கட்சிகடந்த காலங்களில் எடுத்த முடிவு அனைத்துமே சரி என்று நான் சொல்லவில்லை எனவே இந்த முறை அனேகமாக பொது வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று தான் நினைக்கின்றேன்.வடக்கு கிழக்கில் மேலோங்கி இருக்கும் தமிழரசு கட்சி தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் நல்ல முடிவு ஒன்று எடுக்கப்படும்.
இலங்கை தமிழரசு கட்சி பல முடிவுகள் ஆரம்பகாலத்தில் எடுத்தும் அது சாதகமாக உமக்கு ஏற்றது போல் அமையவில்லை. சரத் பொன்சேகவிற்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவு பிழையாக போனது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவு பிழையாக போனது ஆகவே இந்த முறையும் அவ்வாறான தவறுகளை கட்சி விடாது என நம்புகின்றேன்.
ஆதரவளித்தவர்களும் தமிழர்களுக்கு உரிய தீர்வினை வழங்கும் பதில் எவ்வளவு தூரம் பயணித்தார்கள் என்ற கேள்வியும் இருக்கின்றது. எனவே இனி இவ்வாறான முடிவு எடுக்கப்படுகின்ற பொழுது அதனை கேட்பதற்கு மக்களும் தயாராக இல்லை கட்சி உறுப்பினர்களும் தயாராக இல்லை ஆகவே திடகாத்திரமாக தமிழ் மக்கள் இம்முறை பொது வேட்பாளர் ஒருவருக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்-