புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டு வந்த இரண்டு கிராமிய விளையாட்டுகளின் பெயர்கள் இந்த ஆண்டு முதல் மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண் கட்டி பானை உடைத்தல் அதிஷ்ட பானை உடைத்தல் என்றும், பார்வையற்றவர்களுக்கு உணவளிப்பது, நண்பருக்கு உணவு ஊட்டுவது என்றும் மாற்றப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூகத்தில் கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்தார்.