38வது தேசிய மாணவ சிப்பாய்கள் படை அணியின் பதவி உயர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இவ்வணியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமில் படை அணியின் இணைப்பு அதிகாரி லெப்டி னன் கேணல் ஜி.டபிள்யு .நிலாந்த தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவ சிப்பாய் படைப்பிரிவின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வைபவரீதியாக வழங்கி வைத்தார்.
இதன்போது மட்டக்களப்பு மெதடிஷ்த மத்திய கல்லூரி தேசிய மாணவர் சிப்பாய் படை அணியினரின் விசேட ஆயுத அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. வலய கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இது பற்றி இங்கு பிரதம அதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா புலேந்திர குமார் கருத்து வெளியிடுகையில், பாடசாலை மாணவர்களை கற்றல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுத்தாது புறக்கிருத்திய செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தி மாணவர்களை முழுமையான நிலைக்கு உயர்த்துவதற்கு பெற்றோர்கள் முன்வரவேண்டும்.
அந்த வகையில் இந்த சிப்பாய்படை அணியின் பணியில் ஈடுபடுவதற்கு முன் வந்த அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த மாகாணத்தின் பணிப்பாளர் என்ற ரீதியில் மன முவந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்காலத்தில் இந்த படை அணியில் பாடசாலை மாணவர்கள் இணைந்து தமது திறமைகளை வளர்த்து எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தலைமைத்துவத்தை கொண்டு வரும் பிரிவினராக வளர்ச்சி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் .
இதன்போது அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்த மாணவர் சிப்பாய் படை அணியினருக்கு இந்த பதவி விருதுகள் ,சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் எதிர்கால சந்ததிக்குகந்த பிரஜைகளை உருவாக்கும் விசேட திட்டத்தின் கீழ் அன்றைய இளைஞர் விவகார அமைச்சர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலேயே இந்த மாணவர் சிப்பாய் படைஅணி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h04m26s473-1024x834.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h33m15s505-1024x576.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h32m31s433-1024x699.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h32m04s865-1024x576.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h31m46s290-1024x508.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h31m30s850-1024x620.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h30m57s957-1024x576.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h30m37s115-1024x538.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h29m59s197-1024x622.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h29m29s420-1024x476.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h29m09s773-1024x437.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-08-19h28m50s017-1024x529.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h09m22s558-1024x576.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h09m08s658-1024x560.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h08m00s300-1024x576.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h07m01s685-1024x550.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h08m42s204-1024x576.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h06m26s542-1024x686.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h06m21s639-1024x674.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/vlcsnap-2024-04-07-11h05m13s277-1024x738.png)