இந்திய(India) விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) நிலவில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டமாக சந்திரயான் – 4 (Chandrayaan-4) ஐ நிலவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் (S. Somnath) தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம்ஆண்டு இஸ்ரோவின் முயற்சியால் சந்திரயான் – 3 (Chandrayaan-3) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து இஸ்ரோ சந்திரயான் – 4ஐ அனுப்புவதற்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 4 (Chandrayaan-4) தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா(India) அழைக்கப்படும்.
இதன்போது சந்திரயான் – 4இன் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும்.