2009 மே 18 முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்பது உலகறிந்த ஒன்று. தமிழர்மீது இலங்கை அரசாங்க மேற்கொண்ட இன அழிப்பு காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாழ்ந்த மக்கள் தம்மிடமிருந்த அரிசி, உப்பு, நீரை கொண்டு கஞ்சியாக தங்கள் பசியினை ஆற்றி வாழ்ந்து உயிர் நீத்ததை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் 18 திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் வார தொடக்கத்திலிருந்து தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெறுவதுடன் இறுதி நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக அனுஷ்டிக்கப்படும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் ஆரம்பத்தினமான இன்று (12.05.2023) மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. இதில் சமயத்தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கும் பகிர்ந்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.