வருடாந்தம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறும்போது புதிதாக ஐநூறு பேரை மட்டும் இணைப்பதற்கு அனுமதியளிப்பதன் மூலம் பொலிஸ் திணைக்களம் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்தம் 100 தொடக்கம் 150 இராஜினாமாக்கள் மற்றும் பணி இடைநிறுத்தங்கள் பதிவாகுவதாகவும் இந்த வருடத்தில் சுமார் 4,000 பேர் ஓய்வு பெறப் போவதாகவும் பொலிஸ் மா அதிகாரிகளின் கலந்துரையாடலில் தெரிய வந்துள்ளது.
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பொலிஸார் சேவையயை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொறுப்பான அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், பயிலுனர் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து, திருமணம் செய்து கொள்வதில் உள்ள தடைகளை கருத்திற்கொண்டு பயிற்சியாளர்கள் திருப்திகரமாக சேவையாற்றுவதற்கு பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.