மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கெட் வீரர்களை ஏலம் மூலம் பெற்று
t 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றை மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபை எதிர்வரும் சனிக்கிழமை (20) நடாத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரரும் தனது திறமையினை வெளிப்படுத்துவதற்கான களத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் தலைவர் லோபஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தலைவர் அருள்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான கு.சஹான் ஆகியோர் இதன் போது கருத்து தெரிவித்தனர்.
இந்த சுற்றுப்போட்டியானது சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதுடன், இந்த சுற்றுப்போட்டியில் ஐந்து அணிகள் விளையாடவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஏலம் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150பேர் இந்த ரி20 சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ளதாகவும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.