இந்தியாவின் (India) மணிப்பூர் (Manipur) வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று (19) காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.
இதில் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்
எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது.
543 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று (19.4.2024) பொதுத் தேர்தல் (Election) நடைபெற்றதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
அத்துடன் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் (Indian election) ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன்15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லொக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
முதல் கட்ட தேர்தல் நேற்று (19.4.2024) , 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.