தேசிய மாணவச் சிப்பாய்ப் படையணியின் மட்டக்களப்பு 38வது படைப்பிரிவில் கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை, கல்முனை கமு/கமு / ஸாஹிறா தேசிய பாடசாலை மற்றும் மருதமுனை கமு/கமு/ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகள் தேசிய மட்ட முகாமில் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளது.
இதனை கௌரவிக்கும் விதமாக 38வது படைப்பிரிவினுடைய கட்டளையிடும் அதிகாரி லெப்ட்டினன்ட் கேணல் ஜீ.டவலியு.ஜீ.எச். நிலந்த அவர்களின் சார்பாக தேசிய இளைஞர் படையணியின் குச்சவெளி பயிற்சி நிலையத்துக்கு பொறுப்பான பொறுப்பு அதிகாரி மேஜர் எம்.எஸ்.எம். மிப்றாஸ்கான் அவர்களால் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எம்.எச். ஜாபீர், உதவிக்கல்வி பணிப்பாளர்களான யூ.எல். றியால், எம்.எல்.எம். முதர்ரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.