கொழும்பு – காலி முகத்திடலிலுக்கு (colombo galle face) அருகில் ITC ரத்னதீப ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புகள் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஐடிசி ரத்னாதிபா ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புகள் திட்டமானது 300 மில்லியன் டொலர்கள் முதலீட்டில், இந்தியாவிற்கு வெளியே இந்திய ஐடிசி நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக கூறப்படுகிறது.
காலி முகத்திடலிலுக்கு அழகு சேர்க்கும் வகையில் 5.86 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த திட்டத்தின் மிக உயரமான கட்டிடம் 48 மாடிகள் கொண்டதுடன், அதன் உயரம் 224 மீட்டர் ஆகும்.
அத்தோடு, குறித்த கட்டடத்தில் 352 அதி சொகுசு அறைகள் காணப்படுகின்றது.
அதேவேளை, இந்த இரண்டு கட்டிடங்களும் 55 மீட்டர் நீளமுள்ள வான் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது, இது தெற்காசியாவின் ஒரே மற்றும் முதல் வான் பாலமாகும்.
இந்த வானம் பாலத்தில் இரண்டு ஆடம்பரமான நீச்சல் குளங்களும் கட்டப்பட்டுள்ளன.
அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் கிடைப்பதற்காக ஆஹாச என்ற இடம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், ரத்னதீப திட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 5 விழா அரங்குகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.