பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்ற, குழந்தைகளின் பாவனைக்கு ஏற்றதல்ல என கூறப்படும் அரிசி உலக உணவுத் திட்டத்தினால் (WFP) வழங்கப்பட்டதே தவிர அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று உறுதியளித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக WFP இனால் அந்த அரிசி பொதிகள் கூடுதலாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அரசு நிதியில் விநியோகிக்கப்படும் உணவு குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக மாகாண கல்வி நிலையங்களுக்கு அரிசி கையிருப்பு வழங்கப்பட்ட பின்னரும், மாகாண பொது சுகாதார பரிசோதகர்களின் (PHIs) உதவியுடன் வழக்கமான தர சோதனைகளுக்கு அவர்கள் ஆலோசனை வழங்குவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரசு பல்வேறு வளங்களிலிருந்து வரும் கூடுதல் நிதியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 110 ஒதுக்கியுள்ளது . இதன் விளைவாக, WFP திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் உள்ள அரிசியை கலக்க வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.