வங்கிகளில் கடன் பெறுவதற்காக சொத்துக்களை அடமானம் வைத்து, குறித்த பணத்தை மீள செலுத்த முடியாமல் வங்கிகளில் இருக்கும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான பாராளுமன்ற விவாதம் ஒன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வங்கிகள் வழங்கிய கடனை வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு மசோதா (பராத்தா சட்டம்) வரும் 7ஆம் திகதி இந்த பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.
கடனாக பெற்ற பணத்திற்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்வதை டிசம்பர் 15ம் திகதி வரை நிறுத்தி வைக்கவே இந்த மசோதா வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.