கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது குறித்து பாப்பரசர் பிரான்சிஸ் முடிவு செய்வார் என கொழும்பு பேராயரின் தகவல் தொடர்பு இயக்குனர், அருட்தந்தை. ஜூட் கிரிஷாந்த நேற்று (29) தெரிவித்தார்.
“கர்தினால் ரஞ்சித் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை போப் தான் முடிவு செய்வார், பிந்தையவருக்கு அதில் எந்த கருத்தும் இல்லை” என்று அருட்தந்தை. கிரிஷாந்த ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“ஒவ்வொரு ஆயரும் 75 வயதாகும் போது தான் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக திருத்தந்தைக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர்.
எனவே, கர்தினால் ரஞ்சித் தனது 75வது வயதை நிறைவு செய்துவிட்டதாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். இருப்பினும், போப் அவரின் பணியை தொடர சொன்னார் .அதன்படி அவர் தனது பணியை தொடர்கிறார்.
கர்தினால் தனது 80 வயதை அடையும்போது பாப்பரசரைத் தேர்ந்தெடுக்க முடியும். ,” இதுதான் கத்தோலிக்க மரபு என அவர் மேலும் தெரிவித்தார்.