இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கான ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அண்மையில் அதிபரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அருட்தந்தை மா.சக்திவேல் இதனைக் கூறியுள்ளார்.
வடக்கிற்கும், கிழக்கிற்கும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தமிழர்கள் என்பதில் பெருமையடைய எதுவுமில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இதுவரை தமிழர்களை எவரும் ஆளுநர்களாக மற்றும் முதலமைச்சர்களாக நியமிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.