தேங்காய் அறுவடை தொடர்பாக கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது.
லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவர்தனேவின் கூற்றுப்படி, 2024 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த ஆண்டில் , தோராயமாக 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு ஒரு தேங்காயின் விலை ரூ. 163 ஆகநிர்ணயிக்கப்படும்போது தேங்காய் அதிகமுள்ள பகுதிகளில் இது நாட்டின் தேங்காய் தொழிலுக்குரிய குறிப்பிடத்தக்க ஊக்கமாகும் என்பதோடு இதனை “தேங்காய் முக்கோணம்” என்று அழைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.