கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒரு கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடியினருக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.