விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத 9770 இராணுவத்தினர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினருக்கு கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று (4) வரையான காலப்பகுதி பொது மன்னிப்புக் காலமாக அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.