தோனி எனது தந்தை போன்றவர் என்று பதிரன தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது,
டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விடயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (தோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.
வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிரன கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.