கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் பணப்பையை திருடியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப்பையின் உரிமையாளர் ஏப்ரல் 9 ஆம் திகதி சம்பந்தப்பட்ட துணிக்கடைக்குச் சென்று, பணப்பையை வைத்திருந்த கைப்பையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு ஆடையை சரிபார்த்து, மீண்டும் பணப்பையை எடுத்தபோது, பணப்பை இல்லாததை அறிந்து கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றப் பிரிவினர் நடத்திய நீண்ட விசாரணையின் பின்னர், சம்பந்தப்பட்ட துணிக்கடையின் கண்காணிப்பு கெமரா அமைப்பைக் கண்காணித்து, பெண் ஒருவர் கைப்பையைத் திறந்து பணப்பையைத் திருடிச் சென்றது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொக்காவல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.