பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தால் அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மட்டக்களப்பு பாடசாலை அதிபர்களினூடாக மாணவர்களுக்கு சிறுவர் கடத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு பணிப்புரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான துண்டுப்பிரசுரம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல்கள் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே அதிபர் ஆகிய தாங்கள் உரிய வகுப்பாசிரியர்கள் மூலம் அல்லது காலை ஒன்றுகூடலில் கீழ்வரும் அறிவுறுத்தல்களை மாணவர்களுக்கு வழங்கவும்.
பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீடுகளுக்கு உடன் செல்ல பணிப்புரை வழங்கவும்.
இனந் தெரியாதவர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுத்தாலும் வாங்க வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.
இனந்தெரியாதவர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகிறோம் என பணித்தால் வாகனங்களில் ஏற வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.
மாணவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அத்துடன் மேற்படி விடயங்களை பெற்றோருக்கும் தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.
சந்தேகத்திற்கிடமானவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் பொலிஸ் அவசர அழைப்பிற்கு தொடர்புகொள்ளவும்.
அவசர அழைப்பு இலக்கம்
119, 0652224356, 065 2224422