Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

5 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் சமூக ஊடக பதிவில்,

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம் எனவும் பிரம்டன் மேயர் (patrick brown) இடித்துரைத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனவும் பிரம்டன் மேயர் தனது பதிவில் நாமல் ராஜபக்க்சவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
செய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

May 15, 2025
Next Post
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு