மட்டக்களப்பு லியோ கழகத்தினால் பல்வேறுபட்ட வேலை திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக Waste to use எனும் செயற்றதிட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு உதவும் வேலை திட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பழைய கடதாசிகள் மற்றும் காட்போட் மட்டைகள் என்பவற்றை மீள்சுழற்சி செய்து அதிலிருந்து கிடைத்த நிதியின் முதலாம் கட்டமாக மாங்கேனி பிரதேசத்தை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் எழுதுகருவிகள் என்பவற்றை நேரில் சென்று வழங்கி வைத்தனர்.
மேலதிகமாக இன்னும் கிடைக்க பெற்றுள்ள பாடசாலைக்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்திலும் மாணவர்களின் தேவை கருதி அப்பியாசகொப்பிகள் லியோ கழக அங்கத்தவர்களால் வழங்கப்படும் என்றும் இதன் போது தெரிவித்திருந்தனர்.
மேலதிகமாக அப் பிரதேசத்தில் காணப்படும் மிக வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு சேகரிக்கப்பட்ட ஆடைகளும் அதே நேரத்தில் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகளும் லியோ கழக அங்கத்தவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.