ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு முக்கிய விமான இணைப்பை ஏற்படுத்தி மஹான் ஏர்லைன்ஸ் சேவையை ஆரம்பிக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று அறிவித்துள்ளார்.
குறித்த திட்டமானது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய ஈரானிய விமான நிறுவனமான மஹான் ஏர்லைன்ஸ் தயாராக உள்ளது.
அதன்படி, இரு நாடுகளின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் உள்ள பரஸ்பர அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மஹான் ஏர்லைன்ஸ் சேவையின் ஆரம்பமானது, ஈரான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் பங்களிக்கும் வகையில், ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை கட்டவிழ்த்து விடுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.