சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை மீட்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் உதவக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இளைஞர்கள் திறந்த வீசா அல்லது சுற்றுலா விசாவில் செல்லாமல் செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்ட அமைப்பின்படி வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.